தலித் மக்களை புறக்கணிக்கும் அதிமுக அரசு சட்டசபை தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்: திருமாவளவன் ஆவேசம்

சென்னை: தலித் மக்களை புறக்கணிக்கும் அதிமுக அரசுக்கு சட்டசபை தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:   அதிமுகவின் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் தலித் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளையும்,   காட்டப்படும் ஓரவஞ்சனையையும் தலித் மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். தேர்தலின்போது அதிமுகவுக்கு தக்க படத்தைப் புகட்டுவார்கள்.

தொடர்ந்து, தலித் மக்களின் கோரிக்கைகளைப் பொருட்படுத்தாமல் உதாசீனப்படுத்தி வரும்  முதல்வர் திடீரென நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு அவரது ஓரவஞ்சனை போக்கை அம்பலப்படுத்தியுள்ளது.

தலித் சமூகத்தினருக்கு சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது.   அதிமுகவின் கூட்ஆதிதிராவிட மக்களின் வாக்குகள் தங்களுக்கு தேவையில்லை என அதிமுக முடிவெடுத்து விட்டதா, அதிமுக அரசின் இந்த ஓரவஞ்சனைப் போக்கு, தலித் மக்களைப் புறக்கணிக்கும் போக்கு, சாதியவாத அரசியலுக்குப் பணியும் போக்கு  தொடருமேயானால், உரியநேரத்தில் தலித் மக்கள் அதிமுகவுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories:

>