சென்னை: கோவில் பூசாரிகள் நலச்சங்கம் மாநில தலைவர் வாசு அறநிலையத்துறை செயலாளர் விக்ரம் கபூருக்கு எழுதியுள்ள கடிதம்:இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள கோயில்களை நிர்வகிக்க கூடுதலாக 9 இணை ஆணையர்களையும், அவர்களுக்கான அலுவலகங்களையும் அமைக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை கோயில் நிதியை வீணடிக்கும் செயலாகும். தற்போது பதவி உயர்வுக்கு காத்திருக்கும் துணை ஆணையர்களுக்கு பதவி உயர்வு அளிக்கவே இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த ஆணையால் கோயில் மேம்பாட்டுக்கோ, வருவாய் உயர்வக்கோ எந்த பயனும் இல்லை.