இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் வெற்றி பயணம் தொடர முதல்வர், துணை முதல்வர் வாழ்த்து

சென்னை: இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் வெற்றி பயணம் தொடர முதல்வர், துணை முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது டிவிட்டர் பதிவில், “இந்தியாவிற்கான முதல் போட்டியிலேயே, சவால்கள் நிறைந்த சூழ்நிலையிலும் தன் முத்திரையை பதித்து தன் சர்வதேச பயணத்தை வெற்றியுடன் துவக்கியிருக்கும் நம் மண்ணின் மைந்தன் நடராஜனுக்கு வெற்றிகள் மென்மேலும் வந்து சேர வாழ்த்துகிறேன்” என்று கூறியுள்ளார்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது டிவிட்டர் பதிவில், “கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக தனது முதல் வெற்றி பயணத்தை துவங்கியிருக்கும் தமிழக வீரர் நடராஜனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். தனது அபார திறமையால் தாய்நாட்டிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்க்கும் நடராஜனின் சாதனை பயணம் தொடரட்டும்” என்று கூறியுள்ளார்.

Related Stories:

>