×

விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் திமுக இரண்டாம் கட்ட பிரசாரம் தொடக்கம்

சென்னை:  தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர் கொள்ள திமுக தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, தேர்தல் வியூகங்கள் அமைத்தல் மற்றும் தேர்தல் களப்பணிகளை திமுகவினர் தொடங்கியுள்ளனர். திமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவினர் மாவட்டம்தோறும் நேரில் சென்று ஒவ்வொரு பகுதியிலும் நிலவும் பிரச்னைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து மக்களிடம் கருத்துக் கேட்டு வருகின்றனர்.  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ‘தமிழகம் மீட்போம்’ எனும் பெயரில் காணொளி மூலம் பங்கேற்று பேசி வருகிறார். அதை தொடர்ந்து, ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் திமுக பிரசாரத்தை தொடங்கியுள்ளது. அதன்படி ஜனவரி 5ம் தேதி காஞ்சிபுரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தை தொடங்குகிறார். 75 நாட்களில் 15 ஆயிரம் கி.மீ பயணம் செய்து பிரசாரம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 இந்த பிரசாரத்தில் 15 தலைவர்கள் 75 நாட்களில் 1,500 தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்களில் பங்கேற்கின்றனர். முதல்கட்டமாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், கலைஞர் பிறந்த ஊரான திருக்குவளையில் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். டெல்டா மாவட்டங்களில் அவர் பிரசாரத்தில் ஈடுபட்டார். கனிமொழி, எடப்பாடியில் பிரசாரத்தை தொடங்கினார். தற்போது, விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் பிரசாரம் நேற்று இரண்டாம் கட்டமாக தொடங்கியது. இதில் 5 திமுக முன்னணியினர் மாநிலம் தழுவிய பயணம் மேற்கொள்கின்றனர். துணை பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, க.பொன்முடி, சுப்புலட்சுமி ஜெகதீசன், அந்தியூர் ப.செல்வராஜ் மற்றும் தேர்தல் பணிக்குழு இணை தலைவர் ராஜ கண்ணப்பன் ஆகியோர் பங்கேற்று வருகின்றனர்.

Tags : Stalin ,phase ,campaign ,DMK , Stalin's voice towards dawn DMK launches second phase of campaign
× RELATED அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 5-வது கட்ட...