88வது பிறந்தநாள் கி.வீரமணிக்கு ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: 88வது பிறந்தநாளை முன்னிட்டு, கி.வீரமணிக்கு திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: முத்தமிழறிஞர் கலைஞரின் இளவலாக-தாய்க் கழகத்தின் தலைவராக 88வது பிறந்தநாள் காணும் ஆசிரியர் கி.வீரமணியை வாழ்த்தி மகிழ்கிறேன்.

இந்திய ஒன்றியத்திலும் -தமிழ்நாட்டிலும், ஜனநாயகமும் சமூகநீதியும் கடும் சவாலுக்குள்ளாகியிருக்கும் இந்த நெருக்கடியான தருணத்தில், அவற்றைத் தீரமுடன் எதிர்கொண்டு திமுக ஆட்சி அமையப்பாடுபடுவோம் எனத் தனது பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியாக அறிவித்திருக்கும் ஆசிரியர் அவர்களுக்குக் கழகத் தலைவர் என்ற முறையில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். பகுத்தறிவுப் பார்வையுடன், திராவிட இன - மொழி உணர்வு குன்றாமல், தொண்டறத்தால் பொழுதளந்து, மானுட விடுதலைக்காக அயராது பாடுபடும் ஆசிரியர் வழிகாட்டலில், அவர் நோக்கத்தை மனதில் தேக்கி, உறுதியுடன் ஒருங்கிணைந்து பாடுபடுவோம்.இவ்வாறு வாழ்த்து செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>