×

மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று (3ம் தேதி) காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் என்று பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் 3ம் தேதி காலை 10.30 மணி அளவில், காணொலி காட்சி வாயிலாக நடைபெறும். இதில், மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டம் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும்.இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Tags : district secretaries ,DMK ,Duraimurugan ,chairmanship ,MK Stalin: Announcement , Led by MK Stalin DMK district today Meeting of Secretaries: Announcement by General Secretary Duraimurugan
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...