×

பண்டிகை கால சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

சென்னை: பண்டிகை கால சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கை: லோக்மன்யா திலக் - சென்ட்ரல் - லோக்மன்யா திலக் (02163, 02164) இடையே தினமும் இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரயில்,  கடந்த 1ம் தேதி முதல் வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கமாக சென்ட்ரலில் இருந்து புறப்படும் ரயில் அடுத்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல் குஜராத் மாநிலம் காந்திதம் - திருநெல்வேலி - காந்திதம் (09424, 09423) வழியாக  இயக்கப்பட்டு வந்த வாராந்திர சிறப்பு ரயில் வரும் 28ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மறுமார்க்கமாக திருநெல்வேலியிலிருந்து புறப்படும் ரயில் வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே போல் கயா - எழும்பூர் - கயா (02389, 02390) வழியாக இயக்கப்பட்டு வந்த வாரந்திர பண்டிகை கால சிறப்பு ரயில் வரும் 27ம் தேதி வரையிலும், மறுமார்க்கமாக எழும்பூரில் இருந்து புறப்படும் ரயில் வரும் 29ம் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.



Tags : Festive period special Extension of train service
× RELATED ரேஷன் பொருள் கடத்தல் வழக்கில்...