தமிழகத்தை `புரெவி’ புயல் தாக்கும் அபாயம் முதல்வருடன் பிரதமர் மோடி பேச்சு

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதையொட்டி தற்போது, வங்கக்கடலில் `புரெவி’ புயல் உருவாகியுள்ளது. இந்த புயல் நாளை காலை பாம்பன் - கன்னியாகுமரி  இடையே கரையை கடக்கும் என்றும், அப்போது 100 கி.மீ. வேகத்தில் புயல் காற்று வீசும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.இதையொட்டி, தமிழகத்தில் புயலை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த புயல் காரணமாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்திற்கு புயல் ஆபத்து இருப்பது குறித்து பிரதமர் மோடி நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் தொலைபேசியில் பேசினார். அப்போது, தமிழகத்தில் புயலை எதிர்கொள்ள எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி விளக்கம் அளித்தார். இதற்கு பதில் அளித்து பேசிய பிரதமர் மோடி, `புயலை எதிர்கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளது. புயல் தாக்கும் பகுதியில் உள்ள மக்களுக்கான பிரார்த்திப்பதாக’’ கூறினார்.

Related Stories:

>