×

கனமழை எதிரொலி; பயிர்களை பாதுகாப்பது எப்படி?... வேளாண் அதிகாரி அறிவுரை

தேனி: தேனி மாவட்டத்தில் இன்றும், நாளையும், நாளை மறுநாளும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வேளாண்மைத்துறை அறிவுரைப்படி விவசாயிகள் தங்களது பயிர்களை பாதுகாத்து, சேதம் ஏற்படாமல் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேனி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அழகுநாகேந்திரன் அறிவுரை வழங்கி உள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: கன்னியாகுமரி அருகே இலங்கையை அடுத்து உருவாகி உள்ளது. எனவே இன்றும், நாளையும், நாளை மறுதினமும் தேனி மாவட்டத்தில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கரும்பு, உளுந்து, பசிப்பயறு, மக்காச்சோளம், சோளம், பருத்தி, கம்பு, நிலக்கடலை, தென்னை, நெல், வாழை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் இன்றும், நாளையும் தங்களது பயிர்களை காப்பீடு செய்ய பதிவு செய்து கொள்ளுங்கள். காப்பீடுக்கான விண்ணப்பத்துடன் ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகம், அடங்கல் ஆகியவற்றுடன் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி, கூட்டுறவு வங்கிகள், இ-சேவை மையங்களில் பிரிமியம் தொகை செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம். நெல் வயல்களில் நீர் தேங்காமல் எளிதாக வழிந்தோடும் வகையில் வடிகால் வசதி செய்ய வேண்டும். உரமிடுதல், பூச்சிக்கொல்லி தெளிதல், களைக்கொல்லி இடுதல் போன்றவற்றை செய்ய வேண்டாம்.

வெட்ட வெளியில் நின்று மட்டும் விவசாய பணிகளை மேற்கொள்ளுங்கள். தென்னை மரத்தினை பாதுகாக்க துாரில் மண் அணைக்க வேண்டும். மரங்களில் கவாத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். விளைந்த தேங்காய் மற்றும் இளநீர்களை இறக்கி விட வேண்டும். இதன் மூலம் மரத்தின் உச்சியில் உள்ள பாரத்தை குறைத்து விட வேண்டும். இதன் மூலம் புயல், மழையில் மரம் ஓடிவதை தடுக்கலாம். பயிர் மேலாண்மை குறித்து தங்களது பகுதியில் உள்ள வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பலன் பெறலாம். இவ்வாறு கூறியுள்ளார்.


Tags : Heavy rain echo; How to protect crops? ... Agriculture Officer Advice
× RELATED சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள...