புரவிபாளையம்-ஆதியூர் செல்லும் சாலையில் பழுதடைந்த தரைமட்ட பாலங்களால் விபத்து அபாயம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள தரைமட்ட பாலங்கள் பராமரிப்பின்றி உள்ளதால் சேதமடைந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இதில் ஆழியாறு மற்றும் மழைநீர் வடிகால் உள்ள பகுதிகளில் தரைமட்ட பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த பாலங்கள் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகியுள்ளது. இதில் காளியப்பகவுண்டன்புதூர், ஆத்துபொள்ளாச்சி, புரவிபாளையம், நடுபுளி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தரைமட்ட பாலங்கள் சேதமடைந்து விபத்து ஏற்படும் நிலை உள்ளது.

இதில் குறிப்பாக, புரவி பாளையத்திலிருந்து ஆதியூர் செல்லும் வழியில் உள்ள தரைமட்ட பாலம் சேதமடைந்து  பாலத்தின் நடுவே குழிகள் ஏற்பட்டுள்ளதால் அவ்வழியாக செல்லும்  வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள சேதங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>