நீலகிரியில் 8 மாதத்திற்கு பின் இயக்க நடவடிக்கை: குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே மலை ரயில் சோதனை ஓட்டம்

குன்னூர்: 8 மாதங்களுக்குப் பிறகு நீலகிரியில் மலை ரயில்கள் விரைவில் இயக்கப்பட உள்ளது. இதையடுத்து குன்னூர்- மேட்டுப்பாளையம் இடையே  மலை ரயில் சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது. நீலகிரி மாவட்டத்தில் மலை ரயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து மலை ரயில் இயக்கம் நிறுத்தப்பட்டது.  இதனால் கடந்த, 8 மாதங்களாக நீலகிரியில் ரயில் நிலையங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. ரயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தின் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் கொரோனா பரவல் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் நீலகிரி மலை ரயில்களை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் குன்னூரில் இருந்து மலை ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது. குன்னூர் ரயில் நிலையத்தில் இருந்து மலை ரயில் மலைப்பாதை வழியே மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திற்கு ரயில் இயக்கப்பட்டது. நீண்ட நாட்களுக்கு பின் குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் மலை ரயில் வருவதை கண்ட பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Related Stories:

>