×

'புரெவி புயல்'வலுவடைந்ததை தொடர்ந்து பாம்பன் துறைமுகத்தில் ஏழாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

ராமேஸ்வரம்: வங்கக்கடலில் மையம் கொண்டு இருக்கும் புரெவி புயல் வலுவடைந்ததை தொடர்ந்து பாம்பன் துறைமுகத்தில் ஏழாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும், இன்று காலை முதல் ராமேஸ்வரம் தீவு பகுதியில் வீசி வரும் தொடர் சூறைக்காற்றால் கடல் கடுமையான சீற்றம் ஏற்பட்டு கொந்தளிப்புடன் காணப்படுகிறன. ராமேஸ்வரம் சேராங்கொட்டை கடற்கரை ஓரத்தில் உள்ள சிமெண்ட் சாலை கடல் அரிப்பு ஏற்பட்டு சேதமடைந்தது. மேலும், அரிச்சல்முனையிலுள்ள காவல் மையம் கடல் அரிப்பு ஏற்பட்டு சேதமடைந்து சரிந்து விழும் அபாயத்தில் உள்ளது.

இதனையடுத்து, தனுஷ்கோடி எம்.ஆர் சத்திரம் ஆகிய பகுதிகளில் வசித்து வரும் மீனவ மக்கள் வருவாய்த் துறையினர் மற்றும் மெரைன் போலீசாரார் தனியார் பேருந்து மூலம் மீட்கப்பட்டு பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துச் சென்றனர். புயல் வலுப்பெற்று காற்றின் வேகம் 50 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேலே அதிகரித்து வருவதால் தீவு பகுதியில் பேரிடர் சிறப்பு மீட்பு குழு தயார் நிலையில் உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : port ,Pamban ,storm , Purevi storm, Pamban port, warning
× RELATED மீனவர்கள் கோரிக்கையை ஏற்று ஒருநாள்...