20% இட ஒதுக்கீடு கோரி சென்னையில் ஆங்காங்கே கல்வீச்சு போராட்டம்: அன்புமணி ராமதாஸ் உட்பட 1500-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு..!

சென்னை: சென்னையில் நேற்று வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கோரி ஆங்காங்கே ஆர்பாட்டமானது நடைபெற்று வந்தது. இதில் பாமக கட்சியின் இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் சென்னையில் பா.ம.க. போராட்டம் நடத்தியது. இதில் கலந்துகொள்ள வந்த பா.ம.க. தொண்டர்கள் சென்னை மற்றும் புறநகரில் ஆங்காங்கே தடுத்து நிறுத்தப்பட்டனர். அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சென்னை அருகே பெருங்களத்தூரில் கற்கள் வீசி ரயில்களை தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, சென்னையில் ஜிஎஸ்டி சாலை, ரணியம்மன்கோவில், பம்மல் அண்ணாசாலை உள்ளிட்ட பகுதிகள் மற்றும்  தாமஸ் மன்றோ சிலை அருகே பா.ம.க. சார்பில் வன்னியர்களுக்கு தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்கினார். பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, வடக்கு மண்டல இணை பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

இதைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் 20 சதவீத இடஒதுக் கீட்டை உடனடியாக வழங்கக்கோரி கோஷங்கள் எழுப்பினர். இந்த நிலையில், நேற்று இடஒதுக்கீடு போராட்டம் நடத்திய அன்புமணி ராமதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி உள்ளிட்ட 856 பாமகவினர் மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்  பதிவு செய்துள்ளனர்.

Related Stories:

>