மாமல்லபுரத்தில் புரதான சின்னங்களை ராணுவ ஜெனரல் கண்டு ரசித்தார்

சென்னை:  மாமல்லபுரத்திற்கு வந்த, தென்னிந்திய ராணுவ ஜெனரல் சி.பி.முகந்தி, அவரது குடும்பத்துடன் புராதன சின்னங்களை கண்டு ரசித்தார். தென்னிந்திய ராணுவ தலைமை அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் சி.பி. முகந்தி டெல்லியில் உள்ள மத்திய தொல்லியல் துறையிடம் சிறப்பு அனுமதி பெற்று நேற்று மாலை தனது குடும்பத்தாருடன் மாமல்லபுரம் வந்தார். பின்னர், வெண்ணை உருண்டை பாறை, அர்ச்சுணன் தபசு, ஐந்து ரதம் கடற்கரை கோயில் உள்ளிட்ட பல்லவர் கால சின்னங்களை குடும்பத்தோடு சுற்றி பார்த்தார். அவருக்கு மாமல்லபுரம் வரலாறு குறித்தும், பல்லவர்களின் சிற்பங்கள் குறித்தும், அவற்றை உருவாக்கிய மன்னர்கள் குறித்து தொல்லியல் துறை சென்னை வட்ட கண்காணிப்பாளர் ராம், மாமல்லபுரம் தொல்லியல் துறை அலுவலர் சரவணன் ஆகியோர், தெளிவாக விளக்கிக் கூறினார்கள். அனைத்து புராதன சின்னங்களையும் அவர்கள் ரசித்து அவற்றின் முன் நின்று புகைப்படம் எடுத்து கொண்டனர்.

Related Stories:

>