எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும்: வைகோ வலியுறுத்தல்

சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய - மாநில அரசுகள் 60:40 என்ற விகிதத்தில் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவதற்கான நிதியைப் பகிர்ந்துகொண்டு வந்த நிலையில், தற்போது இது பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. சமூகத்தில் அடக்கி ஒடுக்கப்பட்ட, பழங்குடி இன மக்களின் குழந்தைகள் கல்வி பெறும் உரிமையை நசுக்குவதற்கு பாஜ அரசு மேற்கொண்டுள்ள முயற்சி கடும் கண்டனத்துக்கு உரியதாகும். பட்டியல், பழங்குடி இன மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்திற்கு, மத்திய - மாநில அரசுகள் உரிய தொகையை ஒதுக்க வேண்டும்.

Related Stories:

>