×

மூத்த குடிமக்களுக்கான தபால் வாக்கு முறையால் 15% முறைகேடு நடக்கும்: தேர்தல் ஆணையத்தில் டி.ஆர்.பாலு புகார்

சென்னை:திமுக நாடாளுமன்ற குழு தலைவரும், கட்சியின் பொருளாளருமான டி.ஆர்.பாலு இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் ஒரு புகார் மனுவை நேற்று கொடுத்துள்ளார். அதில், தபால் ஓட்டுக்காக வயதானவர்களிடம் தபால் வாக்கு சேகரிக்க பூத் லெவல் அதிகாரிதான் சென்று வர வேண்டும். அவ்வாறு போகும் பட்சத்தில் முறைகேடு கண்டிப்பாக நடைபெறும். மூத்த குடிமக்களுக்கு என தனியாக வாக்களிக்க தனி வாக்குச்சாவடி அமைக்க வேண்டும். இது போன்ற தபால் ஓட்டு முறையால் நூற்றுக்கு 3 கள்ள ஓட்டாக மாறும் வாய்ப்புள்ளது. நடந்து முடிந்த பீகார் தேர்தலின் போது மூத்த குடிமக்களுக்கு தபால் ஓட்டு முறையை தேர்தல் ஆணையம் அமல்படுத்தியது. ஆனால் அதையே நாடு முழுவதும் செய்ய வேண்டும் என்ற நிலைப்பாடு சரியானது கிடையாது. இது போன்ற ஆணைய உத்தரவால் சுமார் 15 சதவீத வாக்கு முறைகேடு நடைபெறும்.


Tags : Palu ,senior citizens ,voting ,Election Commission , 15% malpractice by postal voting system for senior citizens: DR Palu complains to Election Commission
× RELATED முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்குப்பதிவு தொடங்கியது