தேனியில் பரபரப்பு அமமுக கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த தொண்டர்?

தேனி: தேனி புதிய பஸ் நிலையம் அருகே, தனியார் மண்டபத்தில் அமமுக தேனி தெற்கு, வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. ஆலோசனைக் கூட்டத்திற்கு, ஆண்டிபட்டியில் இருந்து தேனிக்கு காரில் நின்றபடியே தொண்டர் ஒருவர் கையில் ரிவால்வரை,  வைத்துக்கொண்டு நாலாபுறமும் சுடுவது போல வந்ததாக கூறப்படுகிறது. இதனால், சாலையில் சென்ற பொதுமக்கள் அச்சமடைந்தனர். போலீசார் அந்த தொண்டரை பிடித்து விசாரிப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரித்தபோது, சில போலீசார், ‘துப்பாக்கி கொண்டு வரவில்லை. சிகரெட் லைட்டரைத்தான் துப்பாக்கி என நினைத்து விட்டனர்’ என்றனர். சில போலீசார், ‘டம்மி துப்பாக்கி’ என கூறினர்.

Related Stories:

>