×

பெங்களூரு கலவர வழக்கில் முன்னாள் மேயர் சம்பத்ராஜ் கைதுக்கு யார் காரணம்?: பரபரப்பு தகவல்

பெங்களூரு: பெங்களூரு கலவரத்தில் முன்னாள் மேயர் சம்பத்ராஜை குற்றவாளியாக்கியதன் பின்னணியில் மிக பெரிய அரசியல் சதி இருப்பதாக  தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூரு தேவர்ஜீவனஹள்ளி மற்றும் காடுகொண்டனஹள்ளி போலீஸ் சரகங்களை ஓட்டியுள்ள காவல்பைரசந்திராவில் கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி  இரவு திடீரென ஏற்பட்ட கலவரத்தில் பல வாகனங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டது. இக்கலவரம் தொடர்பாக 400க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது  செய்துள்ளனர். கலவரம் தொடர்பாக விசாரணை நடத்தும் பொறுப்பு பெங்களூரு நகர மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இக்கலவரம் தொடர்பாக பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி, பெங்களூரு 67வது சிசிஎச் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள  இடைக்கால குற்றப்பத்திரிகையில் முன்னாள் மேயர் ஆர்.சம்பத்ராஜ், முன்னாள் மாநகராட்சி கவுன்சிலர் ஜாகீர் ஆகியோரை குற்றவாளியாக  ேசர்த்துள்ளனர். இந்த வழக்கில் முன்னாள் மேயர் சம்பத்ராஜை கைது செய்த போலீசார் விசாரணை நடத்திய பின் சிறையில் அடைத்துள்ளனர். அவர்  ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி தாக்கல் செய்துள்ள மனு நிலுவையில் உள்ளது.

இதனிடையில், பெங்களூரு கலவரத்தில் முன்னாள் மேயர் சம்பத்ராஜை குற்றவாளியாகியதன் பின்னணியில் அரசியல் சதி இருப்பதாக தகவல்  வெளியாகியுள்ளது. கடந்த 2010ல் நடந்த பெங்களூரு மாநகராட்சி தேர்தலில் தேவர்ஜீவனஹள்ளி வார்டில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி  பெற்ற சம்பத்ராஜ், சிறப்பாக வளர்ச்சி பணிகள் மேற்கொண்டதன் பலனாக 2015ல் நடந்த தேர்தலில் இரண்டாவது முறையாக அதே வார்டில் வெற்றி  பெற்றதுடன் மாநகராட்சி ேமயராக ஓராண்டு காலம் பணியாற்றினார்.
கடந்த 2018ல் நடந்த சட்டப்பேரவை பொதுதேர்தலில் சி.வி.ராமன் நகர் தனி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அவர் குறைவான  வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இருப்பினும் மக்கள் சேவையை தொடர்ந்து வரும் அவர் 2023ல் நடக்கும் சட்டப்பேரவை தேர்தலில்  புலிகேசிநகர் தனி தொகுதியில் போட்டியிட யோசித்து வருகிறார். அவர் கவுன்சிலராக இருமுறை வெற்றி பெற்ற தேவர்ஜீவனஹள்ளி வார்டு  புலிகேசிநகர் பேரவை தொகுதியில் உள்ளது.

இத்தொகுதியில் வெற்றியை தீர்மானிக்கும் வாக்கு வங்கியாக சிறுபான்மை வகுப்பினர்களான தமிழர் மற்றும் இஸ்லாமியர்கள் இருப்பதால், வெற்றி  பெற முடியும் என்பதால் தொகுதி மக்களுடன் நல்ல தொடர்பில் இருந்தார். இது சட்டப்பேரவை தேர்தலில் அவருக்கு சாதமாகிவிடும் என்பதால்,  சி.வி.ராமன்நகர் பேரவை தொகுதி மட்டுமில்லாமல் புலிகேசிநகர் தொகுதியிலும் அவர் போட்டியிடாமல் தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில்  காவல்பைரசந்திரா கலவரத்தில் அவரை சிக்க வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.புலிகேசிநகர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட தேவர்ஜீவனஹள்ளி வார்டில் உள்ள பொதுமக்களிடம் நேரில் சென்று கருத்து கேட்டபோது, இந்த  கலவரத்திற்கும் சம்பத்ராஜிக்கும் தொடர்பு இல்லை. வார்டில் வசிக்கும் அனைத்து தரப்பு மக்களிடமும் அன்பாக பழகுவார், எந்த நேரத்தில்  அழைத்தாலும் வந்து தேவையான உதவிகளை செய்வார். அவரின் அரசியல் வளர்ச்சியை பிடிக்காத சிலர் செய்த சதிதான் காரணம் என்று  வெளிப்படையாக சொல்கிறார்கள். அவர் குற்றவாளியா? இல்லையா? என்பதை நீதிமன்ற தீர்ப்பு தான் உறுதி செய்யும்.

Tags : Sampathraj ,arrest ,Bangalore ,riots , Former mayor in Bangalore riots case Who is the reason for Sampathraj's arrest ?: Sensational information
× RELATED பெங்களூரு வணிக வளாகத்தில் தீ விபத்து:...