முதல்வராக எடியூரப்பாவே தொடர்ந்து நீடிப்பார்: அமைச்சர் ஆனந்த்சிங் தகவல்

கொப்பள்: மாநில முதல்வராக இரண்டரை ஆண்டுகள் எடியூரப்பா தொடர்ந்து நீடிப்பார் என்று அமைச்சர் ஆனந்த்சிங் தெரிவித்தார்.இது தொடர்பாக அவர் கூறியதாவது: சிலர் தனிப்பட்ட காரணத்தால் விஜயநகர் மாவட்டம் வேண்டாம் என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  ஆட்சேபனைகள் தெரிவிக்க தற்போது மாநில அரசு ஒரு மாதம் காலம் அவகாசம் வழங்கியுள்ளது. விஜயநகர் மாவட்டத்துடன் சண்டூர் மக்கள்  இணைவதாக தெரிவித்துள்ளனர். ஆட்சேபனைகள் எடுத்துக்கொண்டு மாநில அரசு தனது முடிவை எடுக்கும்.  

பிரதமர் நரேந்திரமோடி விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். ஆனால் எதிர் கட்சியினர் விவசாயிகள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்தி  வருகின்றனர். மாநில அமைச்சரவை சில காரணங்களால் தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது. விரைவில் விஸ்தரிக்கப்படும். அப்போது  அனைவருக்கும் அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளது. கிராம பஞ்சாயத்து தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள்  அமல்படுத்தப்பட்டுள்ளதால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மாநில முதல்வராக இரண்டரை ஆண்டுகள் எடியூரப்பா தொடர்ந்து நீடிப்பார் என்றார்.

Related Stories:

>