×

சிஏஏ போராட்ட ஷாஹின்பாக் மூதாட்டியும் களமிறங்கினார்

டெல்லி: மாதக்கணக்கில் நீடித்த குடியுரிமை திருத்த சட்ட போராட்டத்தில், கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் கடந்த ஆண்டு நவம்பர் தொடங்கி  ஷாஹின்பாக் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டு உலகின் கவனத்தை ஈர்த்தவர் 82 வயது பில்கிஸ் மூதாட்டி. பிரதமர் நரேந்திர மோடி, பாலிவுட்  ஹீரோ ஆயுஷ்மான் குர்ரானா ஆகியோருடன் உலகின் சக்தி வாய்ந்த 100 பிரமுகர்கள் என அமெரிக்காவின் பிரபல டைம் இதழ் பட்டியலிலும் இடம்  பிடித்தவர்.

விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் விருப்பத்துடன் அரியானா மாநில சிங்கு எல்லைக்கு பில்கிஸ் நேற்று சென்றார். ஆனால் டெல்லி எல்லைக்கு  அப்பால் இருந்த விவசாயிகளை அவர் சந்திக்க விடாமல், தென்கிழக்கு டெல்லியில் உள்ள அவரது வீட்டுக்கு பத்திரமாக அவரை போலீசார் கொண்டு  சேர்த்தனர்.

Tags : Shahinbak ,CAA , The CAA fighter Shahinbak grandmother also banged
× RELATED சிஏஏ அமல்படுத்தியதை கண்டித்து திருவாரூரில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்..!!