3 வயது சிறுமியை கிணற்றில் வீசி கொன்ற பெண்

ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை அடுத்த செட்டித்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த 3வயது சிறுமி கோபிகா நேற்று முன்தினம் மதியம் வீட்டு அருகே விளையாடிக்கொண்டிருந்த போது திடீரென மாயமானாள். போலீஸ் விசாரணையில்  உறவுக்கார பெண் ஒருவர், ‘சிறுமியை பாழடைந்த கிணற்றில் தூக்கி வீசினேன்’ என கூறினார். தீயணைப்பு வீரர்கள் வந்து 80 அடி ஆழ கிணற்றில் இருந்து தண்ணீரை வெளியேற்றி 6 மணி நேர போராட்டத்துக்கு பிறகு சிறுமியின் சடலத்தை  மீட்டனர். சிறுமியை கிணற்றில் வீசிய பெண், சிறுமியின் தந்தையின் அண்ணன் மனைவி ராணி. சிறுமியின் தாயுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டதால், கொலை செய்திருக்கலாம் என்று தெரிகிறது.

Related Stories:

>