×

300 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை தாக்கி அழிக்க கூடிய திறன் வாய்ந்த பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை பரிசோதனை வெற்றி

டெல்லி: இந்தியாவின் அதிநவீன பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை பரிசோதனை வெற்றியடைந்து உள்ளது. இந்தியாவின் ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழகம் சார்பில் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணையை இந்திய கடற்படையினரால் இன்று விண்ணில் ஏவி பரிசோதிக்கப்பட்டது. வங்காள விரிகுடா கடற்பகுதியில் அந்தமான் நிகோபர் தீவு பகுதிக்கு உட்பட்ட கார் நிகோபர் தீவில் இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ். ராண்விஜய் போர் கப்பலில் இருந்து அதிநவீன பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை இன்று காலை 9.25 மணியளவில் விண்ணில் ஏவி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

300 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை தாக்கி அழிக்க கூடிய திறன் வாய்ந்த இந்த ஏவுகணை பரிசோதனை வெற்றியடைந்து உள்ளது.  குறிப்பிட்ட இலக்கில் இருந்த கப்பலை, ஏவுகணை சரியாக தாக்கியது என இந்திய கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளிலிருந்து பிரம்மோஸ் சூப்பர்சோனிக் கப்பல் ஏவுகணையின் கப்பல் எதிர்ப்பு பதிப்பை இந்திய கடற்படை செவ்வாய்க்கிழமை பரிசோதனை செய்தது. டிஆர்டிஓ சமீபத்தில் ஏவுகணை அமைப்பின் வரம்பை, தற்போதுள்ள 298 கிமீ என்ற அளவில் இருந்து, 450 கிமீ ஆக அதிகரித்துள்ளது.

பிரம்மோஸ் ஏவுகணை 2.8 மாக் வேகம் கொண்டது. அதாவது ஒலியின் வேகத்தை விட மூன்று மடங்கு அதிகம். ரஷ்யா மற்றும் இந்தியா இணைந்து, பிரம்மோஸ் ஏவுகணையை காற்று, நிலம் மற்றும் கடல் பரப்புகளை தாக்கும் வகையில் வெற்றிகரமாக ஒருங்கிணைப்பது, உள்நாட்டுமயமாக்கலுக்கான ஒரு பெரிய முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.


Tags : BrahMos supersonic, missile, test, hit
× RELATED தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை...