வால்பாறை எஸ்டேட் கோயில்களில் யானைகள் அட்டகாசம்

வால்பாறை: வால்பாறையை அருகே எஸ்டேட்டில் புகுந்த யானைகள் மாரியம்மன், விநாயகர் கோயிலில் புகுந்து பொருட்களை சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சி வால்பாறையை அடுத்த குரங்குமுடி எஸ்டேட்டில் மாரியம்மன் கோயில் உள்ளது. நேற்று முன்தினம் கார்த்திகை தீபத்தையொட்டி கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து கோயில் நிர்வாகிகள், பக்தர்கள் கோயிலை மூடிவிட்ட வீடு திரும்பினர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மாரியம்மன் கோயிலுக்குள் புகுந்த 3 யானைகள் கோயில் கேட்டை உடைத்து உணவு தேடி உள்ளது. மேலும் அங்கிருந்து பொருட்களை சேதப்படுத்தியது. இதைத்தொடர்ந்து யானைகள் செங்குத்துப்பாறை எஸ்டேட்டில் உள்ள விநாயகர் கோயில் கதவை உடைத்து அங்கும் உணவு தேடியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவயிடத்துக்கு சென்று யானைகளை கண்காணித்து வருகின்றனர்.

Related Stories:

>