மயானத்திற்கு சாலைவசதிகேட்டு சேறு, சகதியான பாதையில் நாற்று நட்டு நூதன போராட்டம்

நாகை: வேளாங்கண்ணியை அடுத்த தண்ணிலபாடி கிராமத்தில் மயானத்திற்கு செல்வதற்கு சாலை வசதி கேட்டு நாற்று நடும் போராட்டத்தில் அப்பகுதி கிராம மக்கள் ஈடுபட்டனர். கீழையூர் ஊராட்சி ஒன்றியத்தில் தண்ணிலபாடி, வேப்பஞ்சேரி ஆகிய இரண்டு ஊராட்சிகள் உள்ளது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தண்ணிலபாடி மேலோடு தெருவில் வசிக்கும் இரு சமுதாயத்தினருக்கும் தனித்தனியாக மயானம் உள்ளது. இந்த பகுதில் தான் இரண்டு ஊராட்சிகளையும் சேர்ந்த மக்கள் இறந்தவர்களின் உடலை எரியூட்டும் மயானத்திற்கு செல்லும் பாதை உள்ளது. ஆனால் பாதை இல்லாமல் பல ஆண்டு காலம் இருந்து வந்தது.

மயானத்திற்கு செல்லும் சாலை முழுவதும் மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக மாறி விடுவதால் இறந்தவர்களின் உடலை தூக்கி செல்லும் பொழுது தடுமாறி சேற்றில் வழுக்கி சடலத்தோடு கீழே விழும் சூழ்நிலை சில நேரங்களில் ஏற்படும். மயானத்திற்கு சாலை கேட்டு பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் இது வரை சாலை வசதி செய்து தரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் சேறும், சகதியுமாக உள்ள மயான சாலையில் நேற்று நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories:

>