கல்லூரி மாணவர்களின் அரியர் தேர்வு ரத்து வழக்கு; ஐகோர்ட் வழக்கு விசாரணை யூடியூபில் ஒளிபரப்பப்பட்டதால் அதிர்ச்சி

சென்னை: இதுவரை இல்லாத வகையில் உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை பகிரங்கமாக யூடியூபில் ஒளிபரப்புவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை ஆன்லைன் வழக்கு விசாரணையில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றதால் குளறுபடி ஏற்பட்டுள்ள நிலையில் அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணை யூடியூபில் ஒளிபரப்புவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக கல்லூரி மாணவர்களின் அரியர் தேர்வை ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்தது.

இந்த முடிவை எதிர்த்து முன்னாள் துணைவேந்தர் மற்றும் வழக்கறிஞர் பாலகுருசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா ஆகியோர் முன்னிலையில் 16 வழக்காக பட்டியலிட பட்டிருந்தது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் நீதிமன்ற பணிகளுக்கு இடையூறு தெரிவிக்கும் வகையில் பேசிக்கொண்டு இருந்தனர்.இதனால் வழக்கை விசாரித்த மறுத்த நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர். இந்நிலையில் நேற்று மனுதாரர் தரப்பில் அவசர முறையீடு செய்யப்பட்டதால் இந்த வழக்கு இன்று பட்டியலிட பட்டிருந்தது.

இந்நிலையில் வழக்கு விசாரணை தொடங்கி நடைபெற்று வந்தது. இதற்கிடையில் தேவையில்லாதவர்களை உள்ளே அனுமதிக்காத வகையில் நீதிமன்ற பணியாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். குறிப்பாக வழக்கு தொடர்பானவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். வழக்கமாக அனுமதிக்கப்படும் செய்தியாளர்கள் கூட அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் இந்த வீடியோ வழக்கு விசாரணை யூடியூப் தளத்தில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதனால் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுதொடர்பாக இந்த செயல் நீதிபதிகள் கவனத்திற்கு எடுத்து செல்ல வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>