×

பாமக-வினர் தொடர் மறியல் போராட்டம்; ரயில்கள் மீது கல்வீச்சு; கடற்கரை முதல் தாம்பரம் வரையிலான புறநகர் ரயில்கள் ரத்து

சென்னை: தாம்பரத்தில் இருந்து சென்னைக்குள் வரும் புறநகர் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. புறநகர் ரயில்கள் மூலம் பாமகவினர் சென்னைக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தாம்பரம் அருகே ரயில் மீது பாமகவினர் கல் வீசி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடற்கரை முதல் தாம்பரம் வரையிலான ரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. பாமக.வினர் தொடர் மறியலில் ஈடுபட்டு வருவதால் ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இடஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தும் பாமக.வினர் ரயில் மீது கல்வீச்சில் ஈடுபட்டுள்ளனர். ரயில் தண்டவாளங்களில் ஆங்காங்கே பாமவினர் போராட்டத்திர் ஈடுபட்டு வருகின்றனர்.

ரயில்வே போலீசார் அறிவுறுத்தலின் பேரில் புறநகர் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. போராட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னை நோக்கி வந்த பாமகவினரை போலீசார் பெருங்களத்தூர் அருகே தடுத்து நிறுத்தினர். முக்கிய நிர்வாகிகள் மட்டுமே சென்னைக்குள் அனுமதிக்கப்படுவர். மற்றவர்கள் திரும்பிச்செல்ல வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தல் செய்திருந்தனர். போலீசாரின் நடவடிக்கையை கண்டித்து பாமகவினர் ஜி.எஸ்.டி சாலையின் இருபுறமும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறனர். 


Tags : Tambaram ,Beach , Bamaga-winner, stir, beach, copper, suburban trains, cancellation
× RELATED தாம்பரம் குப்பைக் கிடங்கில் தீ விபத்து..!!