×

தமிழகத்தில் உள்ள தொழிலதிபர்கள், வணிகர்களுடன் சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் உள்ள தொழிலதிபர்கள், வணிகர்களுடன் சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். ஊரடங்கால் தொழில் நிறுவனங்களுக்கு என்னென்ன பாதிப்பு, அதை எதிர்கொள்வது எப்படி என்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். முழு ஊரடங்கை அமல்படுத்துவதில் வணிகர்களின் பங்கு குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. ஆலோசனையில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஊரக தொழில்துறை அமைச்சர் த.மோ,அன்பரசன் வருவாய்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பங்கேற்றுள்ளனர்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு என்பது அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு நாளை முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டது. அதன் அடிப்படையில் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. குறிப்பாக மளிகை கடைகள் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கான நேரம் குறிப்பிடப்பட்டுளள்து. இந்த சூழ்நிலையில் தான் முழு ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் இருக்கக்கூடிய தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிகர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் தலைமை செயலகத்தில் சற்று முன்பாக ஆலோசனை கூட்டம் தொடங்கியுள்ளது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர், தமிழக டிஜிபி, சென்னை மாநகர காவல் ஆணையர், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஊரகத்துறை அமைச்சர் த.மோ.அன்பரசன், வருவாய்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். மேலும் இந்த கூட்டத்தில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த வணிகர் சங்க நிர்வாகிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்….

The post தமிழகத்தில் உள்ள தொழிலதிபர்கள், வணிகர்களுடன் சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Chief President ,Chennai ,Tamil Nadu ,G.K. Stalin ,Mukheri ,Cockroach Industry Enterprises ,Dinakaran ,
× RELATED மலைச்சரிவுகளைத் தடுத்து மக்களைக்...