மதுரையில் இருந்து புனலூர் செல்லும் பாசஞ்சர் ரயில் எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்றம்

மதுரை: மதுரையில் இருந்து புனலூர் செல்லும் பாசஞ்சர் ரயில் எக்ஸ்பிரஸ் ரயிலாக வருகிற 4-ந் தேதி முதல் இயக்கப்பட உள்ளது. அதன்படி, இந்த ரயில் மதுரையில் இருந்து வருகிற 4-ந் தேதி முதல் இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.20 மணிக்கு புனலூர் சென்றடையும். மறுமார்க்கத்தில் புனலூரில் இருந்து வருகிற 5-ந் தேதி முதல் மாலை 5.20 மணிக்கு புறப்படும். இந்த ரயில் மறுநாள் காலை 6.20 மணிக்கு மதுரை ரயில் நிலையம் வந்தடையும். இந்த ரயில்கள் திருப்பரங்குன்றம், திருமங்கலம், விருதுநகர், வாஞ்சி மணியாச்சி, நெல்லை, நாகர்கோவில், இரணியல், குழித்துறை, பாறசாலை, நெய்யாற்றின்கரை, திருவனந்தபுரம் சென்டிரல், திருவனந்தபுரம் பேட்டை, கொச்சுவேலி, கழக்குட்டம், கணியபுரம், முருக்கம்புழா, சிரயங்கில், வர்க்கலா, எடவை, பரவூர், மையநாடு, கொல்லம், கிளிக்கொல்லூர், குந்த்ரா, எழுகோன், கொட்டாரக்கரா, அவனீசுவரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

Related Stories:

>