2-வது கட்ட கொரோனா அலை..!! உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14.73 லட்சத்தை தாண்டியது; 6.35 கோடி பேர் பாதிப்பு

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14.73 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 1,473,327 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 63,563,001 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 43,944,173 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 1,05,463 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உலகம் முழுவதையும் அச்சுறுத்திவரும் கொரோனா வைரசின் முதல் கட்ட அலை முடிந்துள்ளது. தற்போது 2-வது கட்ட கொரோனா அலை அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் பரவத் தொடங்கி உள்ளது.

உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 6,35,62,534 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4,39,42,135 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 14 லட்சத்து 73 ஆயிரத்து 284 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பாதிப்பு காரணமாக தற்போது 1,81,47,115 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,05,463 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

அமெரிக்கா   -    பாதிப்பு- 1,39,07,737, உயிரிழப்பு -  2,74,190

இந்தியா         -    பாதிப்பு - 94,63,254,  உயிரிழப்பு -  1,37,659

பிரேசில்         -    பாதிப்பு - 63,36,278,  உயிரிழப்பு -  1,73,165

ரஷியா           -    பாதிப்பு - 22,95,654   உயிரிழப்பு -   39,895

பிரான்ஸ்      -    பாதிப்பு - 22,22,488,   உயிரிழப்பு -   52,731

Related Stories:

>