இந்தியாவில் தீவிரவாதிகளை அழிப்பதே பாஜவின் முதல் பணி: பாஜ தேசிய செயலாளர் சி.டி.ரவி தகவல்

சிக்கமகளூரு: இந்தியாவில் தீவிரவாதிகளை வேரறுப்பதே பாஜவின் முதல் பணி என்று பாஜ தேசிய செயலாளர் சி.டி.ரவி தெரிவித்தார். சிக்கமகளூருவில் உள்ள வீட்டில் செய்தியாளர்களிடம் சி.டி.ரவி கூறுகையில்: இந்தியாவில் தீவிரவாதிகளை ஒழிப்பதே பாஜ அரசின் முதல் குறிக்கோள் ஆகும். எக்காரணம் கொண்டும் நாட்டில் தீவிரவாதத்தை பாஜ அனுமதிக்காது. தீவிரவாதிகளுடன் பிரியாணி சாப்பிட்டுக் கொண்டு அரசியல் நடத்தியவர்கள் இருந்தனர். ஆனால் பாஜ ஆட்சிக்கு வந்தபிறகு இந்தியாவில் தீவிரவாதம் குறைந்துள்ளது. பாஜ தீவிரவாதிகளின் தலை மற்றும் வாலை வெட்டியுள்ளது. திரும்பவும் இந்தியாவிடம் வாலாட்டினால் மற்ற உறுப்புகளும் வெட்டப்படும். நாட்டில் தேசதுரோகம் எங்கு நடந்தாலும் பாஜ பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது.

கர்நாடக பாஜ மாநில பொறுப்பாளராக அருண்சிங் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் முதல்வர் எடியூரப்பா மற்றும் பாஜ மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் ஆகியோரிடம் மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை செய்வார். அத்துடன் அருண்சிங், முதல்வர் மற்றும் நளின்குமார் கட்டீல் ஆகியோர் ஆலோசனை செய்து அமைச்சரவையில் யார் யார் இடம் பெறுவார்கள் என்று முடிவு செய்வார்கள். அமைச்சரவை விரிவாக்கம் குறித்து நான் எதுவும் கூறமுடியாது.

முதல்வரின் அரசியல் செயலாளர் சந்தோஷ் தற்கொலை முயற்சி குறித்து காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவகுமார் தவறான தகவல்களை கூறிவருகிறார்.காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் வீட்டுக்கு அவரது கட்சியினரே தீ வைத்த சம்பவத்தை டி.கே.சிவகுமார் மறந்து விட்டு பேசுகிறார். சந்தோஷ் தற்ெகாலை முயற்சி குறித்து தன்னிடம் ஆதாரம் இருப்பதாக கூறிவருகிறார். ஆதாரத்தை கொடுத்துவிட்டு பிறகு பேசட்டும் என்றார்.

Related Stories:

>