×

தேசிய கல்வி கொள்கை செயல்படுத்துவது குறித்து முதல்வர் எடியூரப்பாவிடம் அறிக்கை ஒப்படைப்பு

பெங்களூரு: மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள தேசிய கல்வி கொள்கையை கர்நாடகாவில் செயல்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை கொடுப்பதற்காக அமைக்கப்பட்ட குழு தனது சிபாரிசு அறிக்கையை முதல்வர் எடியூரப்பாவிடம் வழங்கியது.  நாடு முழுவதம் ஒரே சீரான கல்வி கொள்கை செயல்படுத்தும் வகையில் மத்திய அரசு தேசிய கல்வி கொள்கை அறிமுகம் செய்துள்ளது. இதை கர்நாடகாவில் எப்படி செயல்படுத்துவது என்பது குறித்து ஓய்வு பெற்ற தலைமை செயலாளர் எஸ்.வி.ரங்கநாத் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. குழுவில் பேராசிரியர் எம்.ேக.தர், மேலவை உறுப்பினர் அருண் ஷஹாபுரா, வாசுதேவ் ஆத்ரே, அனுராக் பெஹர் ஆகியோர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர். இக்குழு கடந்த இரண்டு மாதங்களாக ஆய்வு செய்து, தனது அறிக்கையை நேற்று முதல்வர் எடியூரப்பாவிடம் வழங்கியது.

இந்த அறிக்கையில், 175 ஆண்டுகளுக்கு பின் இந்திய அரசு புதிய கல்வி கொள்கையை அறிமுகம் செய்துள்ளது. இதில் கர்நாடக அரசின் பங்களிப்பும் அதிகமுள்ளது. வளரும் தலைமுறையினருக்கு சீரான கல்வி கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தேசிய கல்வி கொள்கை அமைந்துள்ளது. இதை செயல்படுத்த வேண்டுமானால், ேகஎஸ்எஸ்இசி மற்றும் எஸ்எஸ்எஸ்ஏ பாட திட்டங்கள் செயல்படுத்தி வரும் பள்ளிகளை அரசின் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும். டிஎஸ்இஆர்டியை புனரமைக்க வேண்டும். மாற்று திறனாளிகளுக்கு கல்வி வசதி ஏற்படுத்த சிஎஸ்ஆர் திட்டம் செயல்படுத்த வேண்டும். தற்போதுள்ள கல்வி மண்டலங்களை காட்டிலும் கூடுதலாக கல்வி மையங்கள் உருவாக்க வேண்டும். அனைத்து விதமான கல்வி உதவி தொகை வழங்குவதை ஒரே குடையின் கீழ் கொண்டுவர வேண்டும். அதில் மாற்று திறனாளிகளுக்கு தனி கல்வி ஊக்க தொகை வழங்க வேண்டும். உயர்கல்வியை மேம்படுத்த பல்கலைக்கழகங்களை நிர்வாகிக்கும் புதிய உயர்கல்வி கொள்கை அறிமுகம் செய்ய வேண்டும்.

அனைத்து வகுப்பிலும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி ஊக்க தொகை கிடைக்க வழி காண வேண்டும். மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ள (Affiliated) மற்றும் தன்னாட்சி சுதந்திரத்துடன் (Autonomous) இயங்கி வரும் கல்லூரிகளின் மேம்பாட்டுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு சிபாரிசுகள் செய்துள்ளது. நிபுணர் குழு கொடுத்த அறிக்கையை பெற்று கொண்ட முதல்வர் எடியூரப்பா, இந்த அறிக்கை செயல்படுத்துவது தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் தனி தனியாக அறிக்கை தாக்கல் செய்யும்படி துணை முதல்வரும் உயர்கல்வி அமைச்சருமான அஷ்வத் நாராயண் மற்றும் கல்வி அமைச்சர் சுரேஷ்குமார் ஆகியோரிடம் அறிவுறுத்துவேன். அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் பெற்றபின், சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிக்கை தாக்கல் செய்து செயல்படுத்தப்படும் என்றார்.

Tags : Eduyurappa ,implementation , Handing over a report to Chief Minister Eduyurappa on the implementation of the National Education Policy
× RELATED பணியிடங்களில் பெண்களை பாதுகாக்கும்...