மருத்துவ முகாம்

திருத்தணி: திருத்தணி அரக்கோணம் சாலையில் உள்ள பீகாக் மருத்துவமனையில் வாரம் ஒருமுறை இலவசமாக சிகிச்சை முகாம்கள் நடைபெறுகிறது. ஒவ்வொரு பிரிவுக்கும் முகாம்களில் தனித்தனியாக நோய்கள் கண்டறிந்து சிகிச்சை வழங்கப்படுகிறது. நேற்றைய தினம் 99வது இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த  குழந்தைகளுக்கான மருத்துவ முகாமில் பீகாக் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் எம்.ஸ்ரீகிரண் குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தார். முன்னதாக மக்கள் தொடர்பு அலுவலர் டி.ரகு அனைவரையும் வரவேற்றார். குழந்தைகள் நல மருத்துவர்கள் டாக்டர்கள் ஹேமச்சந்திரன். கார்த்திக்  சிகிச்சை அளித்தனர். மருத்துவ ஆலோசனை, மருந்துகளும் வழங்கப்பட்டன.

Related Stories:

>