உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா

பள்ளிப்பட்டு: பொதட்டூர்பேட்டை, பள்ளிப்பட்டு, அத்திமாஞ்சேரிப்பேட்டை ஆகிய பகுதிகளில் நடைபெற்ற திமுக மாநில இளைஞரணி செயலாளர்  உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில்  ஒன்றிய செயலாளர் ஜி.ரவீந்திரா தலைமை வகித்தார். பேரூர் செயலாளர்கள்  டி.ஆர்.கே.பாபு, ஜோதிகுமார் ஆகியோர் வரவேற்றனர். இதில்,  மாவட்ட பொறுப்பாளர் திருத்தணி எம்.பூபதி பங்கேற்று கட்சி கொடி ஏற்றிவைத்து பெண்களுக்கு இலவச சேலைகள், பொதுமக்களுக்கு  பிரியாணி ஆகியவற்றை வழங்கும் பணியை தொடங்கிவைத்தார்.

நெசவாளரணி துணை தலைவர் ஓ.ஏ.நாகலிங்கம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்  டி.எம்.சுகுமார், திருத்தணி ஒன்றிய செயலாளர் ஆர்த்திரவி, வழக்கறிஞர் சி.ஜெ.சீனிவாசன் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

Related Stories:

>