இந்தியா, வங்கதேசத்தின் எதிர்ப்பை மீறி பிரம்மபுத்திரா குறுக்கே அணை கட்டும் சீனா

பீஜிங்: திபெத்தில் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே அணை கட்டுவதற்கான திட்டத்தை தனது 14வது ஐந்தாண்டு திட்டத்தில் சீனா முன்மொழிந்துள்ளது. சீனாவின் 14வது ஐந்தாண்டு திட்டமானது 2021ம் ஆண்டு முதல் 2025ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் திபெத்தில் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே அணை கட்டுவதற்கு சீனா முன்மொழிந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கு இந்தியா, வங்கதேசம் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த நாடுகளுக்கு வரும் நதி நீரை அணை கட்டி தடுப்பதன் மூலமாக அது சர்வதேச பிரச்னையாக மாறக்கூடும் எனவும் இந்தியா எச்சரித்துள்ளது. அதையும் மீறி சீனா தற்போது அணை கட்ட தயாராகி வருகிறது.

அருணாசலப்பிரதேசத்தின் எல்லைப்பகுதியான திபெத்தின் கடைசி மாகாணம், மேடாக்கில் யர்லூங் சாங்போ நதியின் குறுக்கே அணை கட்டப்பட உள்ளது.  பிரம்மபுத்திரா நதியானது திபெத்தில் யர்லூங் சாங்போ என அழைக்கப்படுகின்றது. இது திபெத்தின் மிகுந்த நீர்வளம் கொண்டதாகும். சுமார் 2000 அடி உயரத்தில் இருந்து பாயும் நதி நீர் மூலமாக 7 கோடி கிலோவாட் மின்உற்பத்தி செய்யமுடியும். இதன் மூலமாக சீனாவின் ஒட்டுமொத்த மின் தேவையில் 30 சதவீதம் பூர்த்தி செய்ய முடியும். திட்டத்தின் மூலம் கிடைக்கும் 30,000 கோடி கிலோவாட் மின்சாரம் மூலமாக சீனாவின் கார்பன் வெளியீட்டை குறைக்கும் இலக்கை 2030ம் ஆண்டுக்குள் அடைய முடியும். மேலும் 2060ம் ஆண்டுக்குள் கார்பன் வெளியேற்றத்தை முழுமையாக நிறுத்தமுடியும்.

Related Stories:

>