இடைத்தேர்தல் முடிவுக்கு பின் டி.கே.சிவகுமார் நிதானத்தை இழந்துள்ளார்: எடியூரப்பா மகன் விஜயேந்திரா கண்டுபிடிப்பு

மைசூரு: இடைத்தேர்தல் முடிவுக்கு பின் காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவகுமார் நிதானத்தை இழந்துள்ளார். இதனால் சந்தோஷ் தற்கொலை முயற்சி விஷயத்தை அரசியலாக்க முயற்சித்து வருகிறார் என்று பா.ஜ. மாநில துணை தலைவர் விஜயேந்திரா தெரிவித்தார். இது தொடர்பாக முதல்வர் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா கூறியதாவது: மாநில முதல்வர் எடியூரப்பா மாற்றப்படுவார் என்று சிலர் தெரிவித்து வருகின்றனர். ஆனால் முதல்வராக எடியூரப்பா தொடர்ந்து நீடிப்பார் என்று மாநில தலைவர் நளின்குமார்கட்டீல் உறுதிப்படுத்தியுள்ளார். இதனால் முதல்வர் மாற்றம் என்ற கேள்வியே கிடையாது.

முதல்வர் எடியூரப்பா ஆட்சியில் எந்த சமூகத்துக்கும் அநியாயம் ஏற்படாது. அனைத்தையும் சரி செய்து கொண்டு செல்லும் பணி செய்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் எடியூரப்பா மாநில தலைவர் நளின்குமார்கட்டீல், கட்சி மேலிட தலைவர்களுடன் கலந்து ஆலோசனை நடத்தியுள்ளார். முதல்வர் பதவிக்கு எடியூரப்பா வருவதற்கு குருபர் சமுகத்தினரின் பங்களிப்பு இருப்பதாக எச். விஷ்வநாத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நளின்குமார்கட்டீலுடன் முதல்வர் ஆலோசனை நடத்தியுள்ளார். அதேபோல், தேசிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. விரைவில் இதற்கு பதில் கிடைக்கும். அதே போல் யாருக்கும் பாதிப்பு ஏற்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை.

தற்கொலைக்கு முயற்சித்த சந்தோஷை முதல்வர் எடியூரப்பா மருத்துவமனைக்கு சென்று பார்த்து அவரின் உடல் ஆரோக்கியம் குறித்து விசாரணை நடத்தியுள்ளார். இந்த விஷயத்தில் அரசியல் செய்வதை டி.கே.சிவகுமார் கைவிட வேண்டும். இடைத்தேர்தல் முடிவுக்கு பின் காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவகுமார் நிதானத்தை இழந்துள்ளார். இதனால் சந்தோஷ் தற்கொலை முயற்சி விஷயத்தை அரசியலாக்க முயற்சித்து வருகிறார்  என்றார்.

Related Stories:

>