வில்வித்தை வீரருக்கு கொரோனா

வில்வித்தை வீரர்களுக்கான  தேசிய பயிற்சி முகாம் ராணுவ விளையாட்டு மையத்தில்(ஏஎஸ்ஐ) நடக்கிறது.  இந்த முகாமில் பங்கேற்ற  வில்வித்தை வீரர் கபிலுக்கு சோதனை நடத்தப்பட்டதில் கொரோன தொற்று ஏற்பட்டுள்ளது உறுதியானது. இது குறித்து இந்திய விளையாட்டு ஆணையம்(சாய்) நேற்று, ‘ கபிலுக்கு தொற்றுக்கான எந்த அறிகுறியும் இல்லை. இருப்பினும் தனிமைப் படுத்தப்பட்டுள்ள அவரை மருத்துவக் குழு தொடர்ந்து கண்காணிக்கும். அவர் முகாமுக்கு வந்ததும் விதிமுறைகளின் படி சோதனை செய்யப்பட்டது.  

அதுவரை அவர் தனிமையில் தான் இருந்தார். அதனால் முகாமில் உள்ள மற்றவர்களுடன் அவருக்கு தொடர்பு ஏதுமில்லை’ என்று கூறியுள்ளது. ஆனால் பயிற்சி முகாம் 2 நாட்களுக்கு இடை நிறுத்தப்பட்டுள்ளது.  மற்றொரு வில் வித்தை வீரர் ஹிமானி மாலிக்கிற்கு  கடந்த மாதம் கொரோனா தொற்று உறுதியானது குறிப்பிடத்தக்கது.

Related Stories: