×

கார்த்திகை மாத பவுர்ணமியையொட்டி கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா: ஏழுமலையான் கோயிலில் 7 மாதங்களுக்கு பிறகு வலம் வந்தார்

திருமலை: கார்த்திகை மாத பவுர்ணமியையொட்டி, ஏழுமலையான் கோயிலில் மலையப்ப சுவாமி 7 மாதங்களுக்கு பிறகு தங்க கருட வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.108 வைணவ திருத்தலங்களில் கருடசேவை முக்கியமான சேவையாகும். அதேபோல், ஏழுமலையான் கோயிலில் கருடசேவை மிகவும் பிரசித்தி பெற்றது. ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியன்று கருட வாகனத்தில் மலையப்பர் நான்கு மாடவீதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம். ஆனால், கடந்த 7 மாதமாக கொரோனா  பரவலை தடுக்கும் விதமாக வீதியுலா ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், கார்த்திகை மாத பவுர்ணமியான நேற்று திருப்பதி ஏழுமலையான் கோயிலில்  மலையப்ப சுவாமி தங்க கருட வாகனத்தில் எழுந்தருளினார். இரவு 7 மணியளவில்  கோயில் எதிரே உள்ள வாகன மண்டபத்தில் இருந்து நான்கு மாடவீதிகளில்  பக்தர்களின் ‘கோவிந்தா, கோவிந்தா’ என்ற பக்தி முழக்கத்துக்கு மத்தியில் வீதியுலா  வந்தார். தரிசனத்திற்கு வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நான்கு மாட வீதியில் திரண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதில், ஜீயர்கள், அர்ச்சகர்கள் மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் பங்கேற்றனர்.



Tags : Malayappa Swami Veediula ,occasion ,Garuda ,Karthika ,Pavurnami ,Ezhumalayan , On the occasion of the month of Karthika Pavurnami Malayappa Swami Veediula in Karuda vehicle: At Ezhumalayan temple
× RELATED திருவள்ளூர்  வைத்திய வீரராகவர்...