×

வாங்குவதற்கு போட்டா போட்டி மோடி பெயரில் வந்த ஆடு 70 லட்சம் வரை ஏலம் கேட்பு: 1.5 கோடிக்கு குறையாது என உரிமையாளர் அடம்

மும்பை: மோடி என்ற பெயரில் சந்தைக்கு கொண்டுவரப்பட்ட ஆட்டை வாங்குவதற்கு கடும் போட்டி நிலவியது. வந்தவர்கள் 70 லட்சம் வரை ஏலம் கேட்டனர். ஆனால், ₹1.5 கோடிக்கு ஒரு பைசா கூட குறைக்க முடியாது என ஆட்டின் உரிமையாளர் விற்காமலேயே சென்று விட்டார். மகாராஷ்டிரா மேற்கு பகுதியில் உள்ள அட்பாடி கால்நடை சந்தை பிரபலம். கார்த்திக் பூர்ணிமாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இந்த சந்தை கூடியது. இதில் ஏராளமான கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.  சங்கோலா தாலுகாவை சேர்ந்த பாபுராவ் மெட்காரி என்பவர், இந்தச் சந்தைக்கு தனது ஆட்டை கொண்டு வந்தார். அதற்கு மோடி என பெயர் சூட்டியிருந்தார். பிங்க் வண்ணம் பூசப்பட்ட அந்த ஆட்டுக்கு சந்தையில் செம டிமாண்ட் காணப்பட்டது.

 இந்த ஆட்டை ஏலம் விட்டதும், பலர் போட்டி போட்டுக் கொண்டு ஏலம் கேட்டனர். அதிகபட்சமாக ₹70 லட்சம் வரை ஏலம் கேட்கப்பட்டது. ஆனால், 1.5 கோடிக்கு ஒரு பைசா கூட குறையாது என கறாராக கூறிவிட்டார், ஆட்டின் உரிமையாளர் பாபு ராவ் மெட்காரி. ₹70 லட்சத்துக்கு மேல் யாரும் ஏலம் கேட்காததால், ஆட்டை விற்காமலேயே உரிமையாளர் அதனை அழைத்துச் சென்றுவிட்டார்.

Tags : Modi , Pota competition to buy The goat that came in the name of Modi Bidding up to Rs 70 lakh: Owner Adam not less than Rs 1.5 crore
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...