×

காபி தோட்ட உரிமையாளர் தற்கொலை: போலீசார் விசாரணை

சிக்கமகளூரு: காபி தோட்டத்தில் இருந்த குளத்தில் குதித்து காபி தோட்ட உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா உனசேனக்கு கிராமத்தை சேர்ந்தவர் கிரிஷ் கவுடா(45). காபி தோட்ட உரிமையாளரான இவருக்கு அதே பகுதியில் சுமார் 20 ஏக்கர் காபி தோட்டம் உள்ளது. இவர் காபி பயிரிடுவதற்காக வங்கி மற்றும் பல்வேறு இடங்களில் சுமார் ₹30 லட்சம் வரை கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில், வாங்கிய கடனை கட்டும்படி வங்கியிலிருந்து நோட்டீஸ் அனுப்பியதாக தெரிகிறது. இதையடுத்து கிரிஷ் கவுடா ஆல்தூர் பகுதியில் நடக்கும் வாரசந்தைக்கு சென்று பல்வேறு பொருட்களை வாங்கி வந்தவர் நேராக தன் காபி ேதாட்டத்திற்கு சென்றுள்ளார். பின்னர், காபி தோட்டத்தில் இருந்த குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 கிரிஷ்கவுடாவை காணாமல் அவரது குடும்பத்தினர் தேடி வந்த நிலையில், காபி தோட்டத்தில் உள்ள குளத்தில் கிரீசின் சடலம் இருப்பதை அறிந்து ஆல்தூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.தகவலறிந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்து கொண்ட கிரிஷ்கவுாடவுக்கு சொந்தமான 20 ஏக்கர் காபி தோட்ட நிலம் சுமார் ₹2 கோடிக்கு மேல் விலைபோகும் நிலையில் வெறும் ரூ.30 லட்சத்திற்காக அவர் தற்ெகாலை செய்து கொண்டது ஏன்? என்றும் தற்கொலைக்கு வேறு ஏதாவது காரணமா என்பது குறித்தும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Tags : Coffee plantation owner , Coffee plantation owner commits suicide: Police investigate
× RELATED ஒப்புகைச்சீட்டை வாக்காளர்கள் எடுத்து...