மேலும் 5 வாரிய, கழகங்களுக்கு தலைவர்கள் நியமனம்

பெங்களூரு: கர்நாடக மாநில டாக்டர் பி,ஆர்.அம்பேத்கர் வளர்ச்சி கழக தலைவராக சி.முனியப்பாவை நியமனம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. காலியாக இருந்த 30க்கும் மேற்பட்ட வாரிய, கழகங்களுக்கு கடந்த வாரம் தலைவர்கள் நியமனம் செய்திருந்த நிலையில், நேற்று புதியதாக 5 வாரிய, கழகங்களுக்கு தலைவர்கள் நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளது. இதில் கர்நாடக மாநில டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் வளர்ச்சி கழக தலைவராக சி.முனியப்பா, கர்நாடக மாநில பழங்குடியின வளர்ச்சி கழக தலைவராக நேரு ேஹாலேகர், கர்நாடக மாநில ஆதிஜாம்பவா வளர்ச்சி வாரிய தலைவராக துரியோதன மாலிங்கப்பா ஐஹோளே, பாபு ஜெகஜீவன்ராம் தோல் தொழில் வளர்ச்சி கழக தலைவராக பேராசிரியர் லிங்கண்ணா மற்றும் கர்நாடக மாநில சபாய கர்மாச்சாரி வாரிய தலைவராக எம்.சிவண்ணா ஆகியோர் நியமனம் செய்து கூடுதல் தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories:

>