கொரோனாவுக்கு ராஜஸ்தான் பாஜ பெண் எம்எல்ஏ பலி

புதுடெல்லி: ராஜஸ்தானில் பாஜ பெண் எம்எல்ஏ மகேஸ்வரி கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தார். ராஜஸ்தான் மாநிலத்தின் ராஜ்சாமண்ட் தொகுதி பாஜ எம்எல்ஏ கிரண் மகேஸ்வரி (59). இவர், தேசிய பொது செயலாளர், தேசிய துணை தலைவர் மற்றும் பாஜ மகளிர் பிரிவு தலைவராகவும் இருந்தவர். கடந்த சில நாட்களாக கொரோனா நோய் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>