பெருந்துறை தொகுதியில் அதிமுக கரை வேட்டி கட்டியவர்கள் வீட்டுமனைகளை விற்று மோசடி: தோப்பு வெங்கடாச்சலம் எம்எல்ஏ பரபரப்பு புகார்

ஈரோடு: முன்னாள் அமைச்சரும், பெருந்துறை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வுமான தோப்பு வெங்கடாச்சலம் நேற்று அளித்த பேட்டி: பெருந்துறை தொகுதிக்குட்பட்ட சென்னிமலை மற்றும் பெருந்துறை ஒன்றிய பகுதிகளில் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க. கரை வேட்டி கட்டிக்கொண்டு வீட்டுமனைகள் விற்பனை என்ற பெயரில் அரசின் எவ்வித மனை அங்கீகாரமும் இன்றி, சட்டவிரோதமாக மனைகளை பொதுமக்களுக்கு விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் இருந்து எனக்கு புகார்கள் வந்துள்ளன.

மோசடியாக விற்பனை செய்யப்பட்ட இடங்களில் அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் தார்சாலை, குடிநீர் வசதி, சாக்கடை உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க. கரை வேட்டியை கட்டிக்கொண்டு ஆளுங்கட்சியினர் என்ற அதிகாரத்தை பயன்படுத்தி அதிகாரிகளின் உதவியோடு பத்திரப்பதிவு நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில் அதிகாரிகளுக்கு உள்ள தொடர்பு, மோசடியில் ஈடுபட்ட நபர்கள் உள்ளிட்ட அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>