பண்டிகை கால சிறப்பு ரயில்கள்

சென்னை: தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: சென்னை எழும்பூர்- திருச்செந்தூர் இடையே சிறப்பு ரயில் (06105) தினமும் மாலை 4 மணிக்கு புறப்படும்.. இந்த சிறப்பு ரயில் கூடுதலாக பட்லூர் ரயில்நிலையத்தில் நின்று செல்லும், இந்த ரயில் வரும் 4ம் தேதி முதல் இயக்கப்படுகிறது. அதைப்போன்று மறுமார்க்கமாக திருச்செந்தூர்- சென்னை எழும்பூர் இடையே சிறப்பு ரயில் (06106) தினமும் மாலை 6.50 மணிக்கு புறப்படும். இது கூடுதலாக சாத்தூர் ரயில்நிலையத்தில் நிற்கும். . இந்த சிறப்பு ரயில் 5ம் தேதி முதல் இயக்கப்படுகிறது. மேலும் சென்னை எழும்பூர்- காரைக்கால் இடையே சிறப்பு ரயில் (0675) தினமும் இரவு 9 மணிக்கு புறப்படும். இந்த ரயில் 4ம் தேதி முதல் இயக்கப்படுகிறது. அதைப்போன்று காரைக்கால்- சென்னை எழும்பூர் இடையே சிறப்பு ரயில் (06176) தினமும் இரவு 9.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 4.55 மணிக்கு எழும்பூர் வந்தடையும். இந்த சிறப்பு ரயில் 5ம் தேதி முதல் இயக்கப்படுகிறது.  இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கப்படும்.

Related Stories:

>