×

டாஸ்மாக் தலைமை அலுவலகம் முற்றுகை

சென்னை: டாஸ்மாக் கடைகளை உடனே காலி செய்து கட்டிடங்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என மதுக்கூட கட்டிட உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 2019-21ம் ஆண்டு ஏலத்துக்கான ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். முன்வைப்பு தொகையை எவ்வித பிடித்தமும் இன்றி திருப்பித்தர வேண்டும். தங்களின் கட்டிடத்தில் நடைபெறும் டாஸ்மாக் கடைகளை உடனே காலி செய்து திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மதுக்கூட உரிமையாளர்கள் மற்றும் மதுக்கூட ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கத்தினர் நேற்று டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது சங்க நிர்வாகிகள் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: அனைத்து மாவட்ட மேலாளர்களும் 15 நாள் டிடி கேட்டும், கட்ட தவறினால் வைப்பு தொகையை பறிமுதல் செய்யப்போவதாக மிரட்டுகின்றனர். இதேநிலை தொடருமென்றால் நிர்வாகம் எங்களிடம் பெற்ற முன்வைப்பு தொகையில் 15 நாள் டிடியை கழித்து மீதம் உள்ள முன்வைப்பு பணத்தை திருப்பி தருமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று கூறினர்.

Tags : Siege ,Tasmac ,head office , Siege of Tasmac head office
× RELATED டாஸ்மாக் கடையை உடைக்க முயன்ற கைதான நான்கு வாலிபர்களுக்கு சிறை