×

ஐதராபாத்தில் நாளை வாக்குப்பதிவு; பாஜவுக்கு தெரிந்தது ‘ஜும்லா - ஹம்லா’: டிஆர்எஸ் செயல் தலைவர் காட்டம்

ஐதாராபாத்: தெலங்கானா மாநிலம் ஐதராபாத் மாநகராட்சி தேர்தல் நாளை (டிச. 1) நடைபெற உள்ளது. 150 வார்டுகள் உள்ள இந்த மாநகராட்சியில் சுமார் 75 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இந்தத் தேர்தலில் ஆளும் டிஆர்எஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று ஒரு நாள் சுற்றுப்பயணமாக ஐதராபாத் வந்து பிரசாரம் மேற்கொண்டார். அதேபோல் இறுதிகட்ட பிரசாரத்தில் அம்மாநில முதல்வரும் டிஆர்எஸ் தலைவருமான சந்திர சேகர ராவும் பிரசாரம் செய்தார். இந்நிலையில், மாநில அமைச்சரும், ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதியின் (டிஆர்எஸ்) செயல் தலைவருமான கே.டி.ராமராவ் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ‘பாஜகக்கு தெரிந்த விஷயங்கள் இரண்டுதான்.

ஒன்று ஜும்லா (பொய்யான வாக்குறுதி), மற்றொன்று ஹம்லா (தாக்குதல்) மட்டுமே பாஜகவுக்குத் தெரியும். கடந்த 6 ஆண்டுகளில் பாஜக தெலங்கானா மாநிலத்துக்காக எதுவும் செய்யவில்லை. ஆப்பிள், அமேசான் போன்ற பெரிய நிறுவனங்களை ஐதராபாத்திற்கு கொண்டு வந்தவர் யார்? தடுப்பூசி ஆய்வகத்தை பார்வையிட, பிரதமர் மோடி ஐதராபாத் வந்தபோது, முதல்வர் சந்திரசேகர் ராவை அழைக்கவில்லை. பிரதமரும், முதல்வரும் தனிநபர்கள் அல்ல; இந்த நாட்டின் ஒரு அங்கம். ஒருவருக்கொருவர் மதிக்கப்பட வேண்டும்’ என்றார்.

Tags : Kattam ,Hyderabad ,BJP ,TRS , Voting tomorrow in Hyderabad; BJP knew ‘Jumla - Hamla’: TRS executive chairman show
× RELATED தமிழ்நாட்டை இந்தியாவின் ஒரு பகுதியாக பாஜக பார்க்கவில்லை: கருணாஸ் காட்டம்