சிவசங்கர் மீது உபா சட்டத்தில் வழக்குப்பதிவு?... சட்ட வல்லுநர்களுடன் என்ஐஏ ஆலோசனை

திருவனந்தபுரம்: கேரள தங்கம் கடத்தல் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மூத்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய சட்ட வல்லுநர்களுடன் என்ஐஏ தீவிரமாக ஆலோசித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. திருவனந்தபுரம் அமீரக தூதரகம் மூலம் தங்கம் கடத்திய வழக்கில் சொப்னா, சரித்குமார், சந்தீப்நாயர், முதல்வரின் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கர் ஐஏஎஸ் உள்பட 30க்கும் மேற்பட்ேடார் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதில் சிவசங்கரிடம் என்ஐஏ, சுங்க இலாகா, மத்திய அமலாக்கத்துறை ஆகிய விசாரணை அமைப்புகள் கிடுக்கிப்பிடியாக விசாரணை நடத்தின.

இந்த விசாரணையின் போது தன்னிடம் ஒரு செல்போன்தான் இருப்பதாக கூறி இருந்தார். இதற்கிடையே ெசாப்னாவின் செல்போனை பரிசோதித்த போது அதில் சிவசங்கரின் செல்போன் தவிர மேலும் 2 எண்களில் இருந்து வாட்ஸ்-அப் தகவல்கள் வந்திருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக நடத்திய விசாரணையில் 2 எண்களும் சிவசங்கர் பயன்படுத்திய செல்போன்கள் என்பது ெதரியவந்தது. சிவசங்கர் மொத்தம் 3 செல்போன்களை பயன்படுத்தி வந்துள்ளார். மற்ற 2 செப்ேபான்களில் இருந்து வாட்ஸ்-அப் காலில் மட்டுமே சொப்னாவிடம் பேசி உள்ளார். இதையடுத்து அந்த போன்களை கைப்பற்ற விசாரணை அமைப்புகள் தீவிர முயற்சியில் இறங்கின.

அதன்படி சிவசங்கர் பயன்படுத்திய 2வது செல்போன் தற்போது கைப்பற்றப்பட்டு உள்ளது. அதை பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதில் மேலும் பல முக்கிய தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சிவசங்கர், சொப்னா, சரித்குமார் ஆகிய 3 பேரும் சுங்க இலாகா காவலில் உள்ளனர். இன்றுடன் சிவசங்கர் காவல் முடிவடைகிறது. இதையடுத்து அவரை சுங்க இலாகா எர்ணாகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகிறது. அவரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க சுங்க இலாகா தீர்மானித்து உள்ளதாக தெரிகிறது. தேச விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது ‘உபா’ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும்.

சமீபத்தில் இந்த சட்டத்தில் சில திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. இதன்மூலம் கள்ளக்கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீதும் ‘உபா’ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யலாம். கடத்தலில் வரும் பணம் மூலம் பலரும் தேசத்துக்கு எதிரான செயலில் ஈடுபட்டதால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.  திருவனந்தபுரம் தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட சொப்னா, சரித்குமார், சந்தீப்நாயர் உள்பட சிலர் மற்றும் இந்த கடத்தலுக்கு பண உதவி செய்தவர்கள் மீது ஏற்கனவே ‘உபா’ சட்டத்தின்கீழ் என்ஐஏ வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சிவசங்கர் மீதும் ‘உபா’ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய என்ஐஏ சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறது.

Related Stories:

>