×

சூரப்பாவை விசாரிக்கும் குழுவுக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது?: உயர்நீதிமன்ற கிளை கேள்வி..!

சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை விசாரிக்கும் ஆணையத்துக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியது.  அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது எழுந்த ரூ.280 கோடி ஊழல் புகார் உள்ளிட்ட பல்வேறு புகார்களை, விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.இதனிடையே, சென்னை பசுமை வழி சாலையில் உள்ள ஆணைய அலுவலகத்தில், உறுப்பினர்களுடன் ஆணைய அதிகாரி கலையரசன் ஆலோசனை மேற்கொண்டார்.  

இந்த நிலையில், சூரப்பா மீதான ஊழல் புகாரை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள நீதிபதி கலையரசன் குழுவின் விசாரணைக்குத் தடை விதிக்கக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சூரப்பாவுக்கு எதிராக புகார் அளித்தவர் புகாரில் போலி முகவரி, போலி பின்கோடு எண் அளித்துள்ளார். அவர் புகாரில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண் உத்திரபிரதேசத்தை சேர்ந்த ஒருவருடையது. புகார்தாரரின் உண்மை தன்மையை ஆராயமல் விசாரணை குழு அமைத்தது சட்டவிரோதம் என்று மனுவில் குறிப்பிட்டு விசாரணைக்குத் தடை விதிக்கக்கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை விசாரிக்கும் ஆணையத்துக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியது. மேலும், புகார் எழுந்த அனைத்து துணைவேந்தர்கள் மீதும் இதேபோன்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என்றும் கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்ற கிளை உரிய விளக்கம் அளிக்காவிட்டால் தமிழக அரசின் அரசாணைக்கு தடைவிதிக்க நேரிடும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Surappa ,panel ,High Court , Surappa, Govt., highcourt Branch
× RELATED ஈஷா யோகா மையத்தில் பணியாற்றிய 6 பேர்...