×

எச்.ஐ.வி தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர் ‘செக்ஸ்’ வைத்து கொள்வது கொலை முயற்சி அல்ல..! டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

புதுடெல்லி: எச்.ஐ.வி தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர் மற்றொருவருடன் ‘செக்ஸ்’ வைத்து கொள்வது கொலை முயற்சியாக கருதமுடியாது என்று, டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. பாலியல் தொற்று நோய் எனப்படும் எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்டவர் தனது வளர்ப்பு மகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், அவருக்கு எதிராக கொலை முயற்சி வழக்கின் கீழ் நடவடிக்கை எடுக்க விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது. அதில், எச்ஐவி பாதித்த ஒருவர், தான் விரும்பிய நபரின் சம்மதத்துடனோ அல்லது  சம்மதம் இல்லாமல் உடலுறவு வைத்துக் கொள்வதை கொலை முயற்சியாக கருத வேண்டும். அவர் தனக்கு தொற்று பாதிப்பு இருக்கிறது என்று தெரிந்தும்,  அவர் மற்றொருவருடன் ‘செக்ஸ்’  வைத்துக் கொள்வதை கொலை முயற்சியாக கருதி அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுட்டிக் காட்டப்பட்து.

இந்த தீர்ப்பை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இம்மனு மீதான விசாரணை டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி விபு பக்ரு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், ‘இந்த வழக்கை பொறுத்தமட்டில் எச்ஐவி - பாசிட்டிவ் பாதிக்கப்பட்ட நபர், தனது வளர்ப்பு மகளை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்தில் அவர் மீது பாலியல் பலாத்கார வழக்கின் கீழ் அவருக்கு தண்டனை வழங்கலாம். அவருக்கு எதிராக பாலியல் வன்முறை அல்லது தவறான நடத்தை ஆகிய பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும். குற்றவாளி எச்.ஐ.வி தொற்று பாதித்தவர் என்பதற்காக அவர் மீது ஐபிசியின் பிரிவு 307 இன்கீழ் கொலை முயற்சி குற்றவாளியாக கருத முடியாது. நீதிமன்றத்தில் வைக்கப்பட்ட வாதம் சரியானது. அதை தவறு என்று கூற முடியாது.

எச்ஐவி பாதித்த நபரால் பாதுகாப்பற்ற உடலுறவு கொள்வது கவனக்குறைவான செயல் என்று அழைக்கலாம். காரணம், அவர் தனது நோயின் தன்மையை அறிந்திருக்கிறார். மேலும், தன்னுடன் உடலுறவு கொள்வோரின் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்பதையும் அவர் அறிவார். எனவே, அவர் ஐபிசியின் பிரிவு -270 இன் கீழ் அவரை தண்டிக்கலாம் (உயிருக்கு ஆபத்தான தொற்றுநோயால் பாதிப்பை ஏற்படுத்துதல்). பெரும்பாலான நாடுகளில் இதுபோன்ற விவகாரத்தில் தனித்தனி சட்டங்கள் இல்லை. இதற்கான சட்டங்கள் தற்போதைய தேவையாக உள்ளது. இவ்வழக்கில், காவல்துறையினர் பிரிவு 307 ஐ பயன்படுத்தவில்லை. ஆனால், குற்றச்சாட்டுகளை தீர்மானிக்கும் போது சம்பந்தப்பட்ட குற்றம் சாட்டப்பட்ட நபர் மீது பிரிவு 307 ஐ விதிக்க விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், மனுதாரர் கூறும் வாதங்களின்படி குற்றம்சாட்டப்பட்ட நபரால் எச்ஐவி தொற்று பரவியதற்கான ஆதாரம் இல்லை. எனவே, அவர் மீது கொலை முயற்சி குற்றம் கூறமுடியாது.

எச்ஐவி தொற்று பாதித்தவரால் மற்றொருவருக்கு தொற்று பரவியதற்கான எந்தவொரு அறிவியல் ஆதாரமும் இல்லாத நிலையில், விசாரணை நீதிமன்றம் அவருக்கு எதிராக தீர்ப்பு கூறியுள்ளது. இது அவரைக் கொல்லும்’என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Having sex with an HIV positive person is not an attempt to kill ..! Delhi High Court Action Judgment
× RELATED தமிழ்நாட்டில் 39 தொகுதியில் வேட்பு...