பாகிஸ்தான் கேப்டன் மீது இளம்பெண் பாலியல் புகார்

லாகூர்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் கேப்டன் பாபர் அசாம். தற்போது பாகிஸ்தான் அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் பாபர் அசாம் மீது இளம்பெண் பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.  இதுபற்றி அந்த பெண் கூறுகையில், பாபர் அசாம் பிரபலமான கிரிக்கெட் வீரராக இல்லாதபோதே எனக்குத் தெரியும். நானும், பாபரும் பள்ளியில் ஒன்றாகப் படித்தோம். கடந்த 2010ல் பாபர் என்னிடம் காதலைத் தெரிவித்தார்.

என்னைத் திருமணம் செய்வதாக உறுதியளித்த பாபர், என்னுடன் பாலியல் உறவு வைத்து கர்ப்பமாக்கினார். நான் கர்ப்பமானதை வெளியில் கூறக்கூடாது என மிரட்டினார், அடித்தார். எனக்கு பாபர் அசாமிடம் இருந்து நீதி கிடைக்க வேண்டும், எனத் தெரிவித்துள்ளார். இந்த குற்றச்சாட்டால் பாபர் அசாமுக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

Related Stories:

>