ஐஎஸ்எல் கால்பந்து: கவுகாத்தி-கோவா இன்று மோதல்

கோவா: 11 அணிகள் பங்கேற்றுள்ள 7வது ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது. நேற்று மாலை நடந்த போட்டியில் ஜாம்ஷெட்பூர் எப்சி-ஒடிசா எப்சி அணிகள் மோதின. இந்த போட்டி 2-2 என டிராவில் முடிந்தது. தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு நடந்த 11வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.- கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்புடன் நடந்த இந்த போட்டியில் இரு அணிவீரர்களும் கோல்கள் அடிக்கவில்லை. இதனால் போட்டி டிராவில் முடிந்தது.

இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் லீக் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி)- எப்.சி. கோவா அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் இதுவரை 12 போட்டிகள் நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் 5ல் கோவா, 2ல் கவுகாத்தி அணிகள் வென்றுள்ளன. 5 போட்டி டிராவில் முடிந்துள்ளது.

Related Stories:

>